தங்கம் வாங்க உகந்த நேரம்.. விலை அதிரடி சரிவு
Jul 26, 2025, 10:54 IST1753507447132
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.73,280க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்கள், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - ஈரான் போர் உள்ளிட்ட உலக நாடுகளில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக தங்கம் விலை அதிரடியாக ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் ஜூலை மாதம் தொடங்கிய முற்பாதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைந்து, ஒரு சவரன் மீண்டும் ரூ.73 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது., அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.73,280க்கும், ஒரு கிராம் ரூ.9,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.126க்கு விற்கப்படுகிறது.


