அதிரடியாக சரிந்தது தங்கம் விலை- திகைக்க வைத்த இன்றைய நிலவரம்

 
gold gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது.

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக என்பதைவிட,  கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடி ஏற்றங்களை கண்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.50,000 என்கிற அளவில் இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் ரூ.70,000ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. அதன்பிறகும் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு 70 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840க்கும், ஒரு கிராம் 150 ரூபாய் கிராம் 8,980க்கும் குறைந்து விற்பனை செய்கிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.117-க்கும் விற்பனையாகிறது.