இன்றும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது.

gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.67,400க்கும், ஆபரண தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,425 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.68,080க்கும், ஒரு கிராம் ரூ.85 அதிகரித்து ரூ.8,510-க்கும் விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே உலக அளவிலான போர் பதற்றம், அமெரிக்க பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் 2024- 25 ஆம் நிதியாண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாதவகையில் உயர்ந்துள்ளது. இதேநிலை நீடித்தால் ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை 18 சதவீதக்கும் மேல் அதிகரிக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கப்பட்டுள்ளனர்.