இன்றும் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!
Mar 20, 2025, 10:42 IST1742447535434
இன்றும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320க்கும், கிராம் ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.8,290க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.66,480-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.20 அதிகரித்து, ரூ.8,310-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை விலை மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.114-க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


