சென்னையில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை

 
gold

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

gold

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. இதன் மூலம்  ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.45,160-க்கு விற்பனையாகிறது. அதேபோல்  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,645-க்கும் விற்பனையானது.


இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தில் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,800-க்கும், ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.ரூ.5,600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ.76-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.76,000-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

gold

தீபாவளி விற்பனை தொடங்கியதில் இருந்து தற்போது வரை தங்கம், வெள்ளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாகவும், தந்தேரா தினத்தில் தங்கம், வெள்ளி விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்து 41 டன் தங்கம், 40 டன் வெள்ளி விற்பனையாகி உள்ளதாகவும் வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.