#BREAKING அதிரடி காட்டும் தங்கம் விலை

 
gold

தங்கம் விலை காலை சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.3,200 குறைந்தது.

Gold

தங்கம் விலை காலையில் உயர்ந்த நிலை தற்போது குறைந்துள்ளது, காலை சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000க்கும் விற்பனையாகிறது, ஒரு கிராம் தங்கம்  ரூ.15,000ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மேலும், இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அரிய உலோகங்களில் ஒன்றான தங்கத்தின் மதிப்பானது, உலக சந்தையில் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. முதலீடு என்றாலே பங்குச்சந்தை தான் என்ற நிலையானது கடந்த 2 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது. ஏனெனில் பங்குச்சந்தைகள் அடி வாங்கும்போது முதலீட்டாளர்கள் உடனடியாக தங்கத்தின் மீது முதலீடுகளை திருப்பி விடுகின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு விறுவிறுவென உயர்ந்துகொண்டே போகிறது. உலகளாவிய பண வீக்கம் மற்றும் டாலர் மதிப்பின் நிச்சயமற்ற தன்மை காரணமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் சேமிப்பை தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதுவே தங்கம் விலை ஏறுவதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.