தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி பாக்ஸ்கான் விண்ணப்பம்

 
foxcon

சென்னை அருகே இயங்கி வரும் பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐ-போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது
. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில்,  பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1,792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது.ஆலை விரிவாக்கம் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐ-போன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ப்ரீமியம் வகை மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.2,601 கோடி முதலீட்டில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலை மூலம் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.