வாட்டும் வெயில்! பேருந்து ஓட்டுநர்களை கூல் செய்ய புது வசதி

 
Fan

சென்னை மாநகரப் பேருத்துகளில் ஓட்டுநர் இருக்கைகளுக்கு பேட்டரி மின்விசிறி வசதி செய்து தரப்பட்டுள்ளது.

கடும் வெயில் பாதிப்பிலிருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் பேட்டரி மின்விசிறி பொருத்தப்பட்டு வருகின்றன.பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கை மீது பேட்டரி மின்விசிறிகள் பொருத்தப்படுகின்றன. மகளிர் கட்டணமில்லாப் பேருந்து உள்ளிட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக ஆயிரம் மாநகரப் பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளில் பேட்டரி மின்விசிறி பொருந்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பணிமனைகளைச் சேர்ந்த 250 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளுக்கு தற்போது பேட்டரி மின்விசிறி பொருந்தப்பட்டுள்ளது. கத்திரி வெயில் வாட்டி வரும் நிலையில் ஓட்டுநர் இருக்கை அருகே போதுமான காற்றோட்டம் இருக்கும் வகையில் பேட்டரி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.