சிக்னல் கோளாறு - சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்குவதில் தாமதம்

சிக்னல் கோளாறு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதற்காக மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயணடைந்து வருகின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வபோது ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில், சிக்னல் கோளாறு காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்கள் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வழக்கத்தைவிட 20 முதல் 30 நிமிடம் தாமதமாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றனர். சென்ட்ரல் முதல் திருவள்ளூர் வரை செல்லும் மார்க்கத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். சென்ட்ரலில் இருந்து பெரம்பூர் வழியாக ஆவடி, திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.