இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

 
protest

ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில்  இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக-பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.