சென்னை-டெல்லி போட்டிக்கான டிக்கெட் விற்பனை - காலை 10.15 மணிக்கு தொடக்கம்!

சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது.
18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நேற்று13வது போட்டி நடைபெற்றது. லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், சேப்பாக்கத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது. ஏப்ரல் 05ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு தொடங்குகிறது.