மக்களே இதை செய்ய தவறினால் ரூ.5000 அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை...!

 
chennai corporation

சென்னை மாநகராட்சி தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பதினைந்து மண்டலங்களிலும், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ஆம் தேதிக்குள் செல்லப்பிராணி உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், ஜூன் 16ஆம் தேதி முதல் உரிமம் பெறாத நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். செல்லப்பிராணி உரிமையாளர்களுக்காக  11 ஏபிசி மையங்களில் மைக்ரோசிப் பொருத்துதல, வெறிநாய்க்கடி தடுப்பூசி, உரிமைம் பெறுதல் உள்ளிட்ட இலவச சேவைகள் வழங்கப்படுகின்றன. 

செல்லப்பிராணி உரிமையாளர்களுகக்கான உரிமம் பெறும் செயல்முறையை எளிமையாக்கவும் வேகப்படுத்தவும் மாநகராட்சி பிரத்யேகமாக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், செல்லப்பிராணி வளர்ப்போர் ஈஸியாக உரிமம் பெறலாம். எனவே, இதுவரை செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறாதவர்கள் ஜூன் 16ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும் என  மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி?

1.சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் Chennaicorporation.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல  வேண்டும்.

2.முகப்பு பக்கத்தில் online services பிரிவின் கீழ்  pet license என்பதை தேர்வு செய்ய வேண்டும். 

3. பிறகு, செல்லப்பிராணி உரிமையாளர் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல், முகவரி, சான்று கொடுத்து கணக்கை உருவாக்க வேண்டும்

4. அதில் new pet registration மூலம் உங்கள் செல்லப்பிராணியின் பெயர், இனம், வயது, தடுப்பூசி விவரங்களை உள்ளிட வேண்டும்

5. அடுத்ததாக செல்லப்பிராணி புகைப்படும், உரிமையாளர் புகைப்படம், ஒரு வருடத்திற்குள் செலுத்திய ரேபிஸ் தடுப்பூசி சான்றிதழை பதிவேற்ற வேண்டும்

6. சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் விவரங்களை சரிபார்த்த பிறகு, கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்ம்மஸ் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

7. பணம் செலுத்திய பிறகு உரிமம் இணையதளத்தில் கிடைக்கும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னையில் இதுவரை 78,392 செல்லப்பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 9,656 உரிமங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. இதனால், 68,736 உரிமங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.