மீண்டும் கொரோனாவின் பிடியில் சென்னை; பொதுமக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

 

மீண்டும் கொரோனாவின் பிடியில் சென்னை; பொதுமக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

விதிகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சிகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகரிக்கிறது. கடந்த சில காலமாக கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் மாவட்ட அளவில் சென்னை மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் போது சென்னை கோரப்பிடியில் சிக்கியது அனைவரும் அறிந்ததே. அச்சமயம் மருத்துவமனைகள் இடமில்லாமல் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் வெளியிலேயே காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இதனால், தற்போது சென்னையில் மீண்டும் தொற்று அதிகரிப்பதை எச்சரிக்கையாக கருத வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மீண்டும் கொரோனாவின் பிடியில் சென்னை; பொதுமக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறி பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அரசின் தடையை மீறி நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 20 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அரசின் வழிகாட்டல்களை மீறும் அமைப்புகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுவரை 60 இடங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களிடம் இருந்து 2 லட்சத்து 79 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.