குப்பை கொட்டுவதை கண்காணிக்க AI கேமரா - சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்..!!

 
chennai corporation

பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை  பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னையில் பொதுஇடங்களில் விதிகளை மீறி குப்பை கொட்டுவதை தடுக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  சென்னை மனகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து வெளியேற்ற வேண்டும், பொது இடங்களில் சாலைகளில் குப்பைகள் , கட்டிட கழிவுகளை கொட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதமும் விதிக்கப்படுகிறது.  இருப்பினும் குப்பைகள் கொட்டப்படுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 

corporation

இதன்காரணமாக,  கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், அதனை  மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு அறையுடன் இணைத்து நேரலையாக கண்காணிக்கப் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டியதாக இதுவரை 18 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.