பொன்முடியுடன் நெருக்கம்...துணை மேயர் பதவிக்கு தேர்வான மகேஷ்குமார்...!!

 
tn

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் மு. மகேஷ்குமார்.

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவியில் கே.கே. நகர் தனசேகரன், சிற்றரசு, மகேஷ் குமார் ஆகியோர் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது  துணை மேயர் தேர்தல் போட்டிக்கு மகேஷ்குமார்தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தமிழகத்தின் 21 மாநகராட்சியும் திமுக கைப்பற்றிய நிலையில் சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 200 வார்டுகளில் 153 வார்டுகளை வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

corporation

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில்,  துணை மேயர் பதவியில் அமரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் வெகுவாகவே காணப்பட்டது.
இதில் திமுக சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பதவி வகித்து வரும் சிற்றரசுக்கு சென்னை துணை மேயர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் கசிந்தன . அதேசமயம் கேகே நகர் பகுதி முன்னாள் செயலாளரும் , திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே.நகர் தனசேகரனும்  இந்த ரேஸில் சிற்றரசுக்கு போட்டியாக களம் இறங்கினார்.

tn

 ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  காரணம் விருகம்பாக்கம் தொகுதி வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா  மகன் பிரபாகரனுக்கு ஒதுக்கப்பட்டு, அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் சட்டமன்றத்தில் நுழைந்து விட்டார்.  இதனால் மனக்குமுறலில் இருந்த தனசேகருக்கு துணை மேயர் பதவி வழங்கி திமுக தலைமை சற்று ஆறுதல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தனசேகரன் வெற்றி பெற்றிருந்தார். இதனால் நிச்சயம் அவருக்கு துணை மேயர் பதவி கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல்கள் கசிந்தன.

tn

ஆனால் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது மகேஷ் குமாருக்கு துணை மேயர் பதவியில்போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேகே நகர் தனசேகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தாலும் அவர் மீது கட்சி தலைமைக்கு சில புகார்கள் சென்றதாக சொல்லப்படுகிறது.  அதேசமயம் மகேஷ்குமார் மற்றவர்களை காட்டிலும் எளிமையானவராகவும், எளிமையானவராகவும், விசுவாசம் கொண்டவராகவும் இருந்ததால் திமுக தலைமை அவரை தேர்வு உள்ளதாம். அதேசமயம் மகேஷ் குமார் பொன்முடிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுவதால் துணை மேயர் பதவி தேர்வில் , அவரின் பரிந்துரையையும் திமுக தலைமை காது கொடுத்து கேட்டதன் விளைவே இது என்று சொல்லப்படுகிறது .