போகியன்று பிளாஸ்டிக், டயர் எரித்தால் அபராதம்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை...

 
chennai corporation

போகிப் பண்டிகையன்று சென்னையில் விதிகளை மீறி பிளாஸ்டிக் , டயர் போன்றவற்றை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையின் முதல் விழாவான் போகிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை என்றாலே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற செம்மொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்துக் கொண்டாடுவர். அப்படி பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் எரிக்கப்படும்போது  ஏற்படும் காற்று மாசுவினால் வளிமண்டலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

போகிப்பண்டிகை

இதனால் சென்னையில் பிளாஸ்டிக் மற்றும் டயர்களை எரிக்க வேண்டாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.  இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் அறிவிப்புதான் என்றாலும்,  இந்த முறை விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை  மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை; மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்!

அவ்வாறு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் மற்றும் டயர்களை எரித்தால்  ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாளை கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.