“சென்னையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன”- காவல் ஆணையர் அருண்

சென்னையில் குற்ற சம்பவங்கள்,குட்கா புழக்கமும் குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டியளித்துள்ளார்.
சென்னை வெப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 43-வது அகில இந்திய காவல்துறையின்2024-25ஆண்டுக்கான குதிரையேற்றப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக பங்கு பெற்று வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் குதிரைப்படை வீரர்கள் மற்றும் வீராங்கனைளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
தமிழக காவல்துறை சார்பாக ஒரு உதவி கண்காணிப்பாளர் உதவி காவல் ஆணையாளர் ஒன்பது குதிரை ஏற்று வீரர்கள் மற்றும் ஒரு பெண் குதிரை ஏற்ற வீராங்கனை ஆகியோர் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழக காவல்துறை அணியின் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆபீஸர்ஸ் எக்ஸ் பிரிவில் பெண்களும் பதக்கமும் முதல் நிலை பெண் காவலர் சுகன்யா ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் என இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளார்கள்.போட்டியில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரில் சந்தித்து பெருநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு சான்றுகளை வழங்கியும் கௌரவித்தார். போட்டியில் பங்கேற்ற குதிரைகளையும் பார்வையிட்டு வெற்றி பெற்ற குதிரைகளின் சாகசங்களையும் நேரில் கண்டு பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், “சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன. மக்களின் எண்ண ஓட்டம் நன்றாக மாறி உள்ளது. ஊடகங்கள் கொண்டு செல்வதில் மக்கள் முடிவு செய்வார்கள். சென்னையில் குட்கா புழக்கங்களும் குறைந்து இருக்கிறது. சென்னை காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகமும் இணைந்து பள்ளி கல்லூரிகளுக்கு அருகே விற்பனை செய்யடும் குட்கா பொருட்களை விற்பனையை தடுத்துள்ளோம்” எனக் கூறினார்.