5 வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் - சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு!
சென்னையில், ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், இதனால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை குறைக்கும் வகையில் சென்னையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வபோது சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஐந்து வகையான விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, `ஹெல்மெட்' அணியாமல் வந்தால் அபராதம் நோ-என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் அபராதம் ஆகிய விதிமீறலுக்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


