பெரும் பரபரப்பு! அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் தனது காதலனுடன் மறைவான இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் மாணவியின் காதலனை அடித்து துரத்திவிட்டு மாணவியிடம் தவறாக நடந்ததோடு அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அண்ணா பல்கலக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.