பரந்தூருக்கு பதில் சென்னை விமான நிலைய விரிவாக்கம் - தவெக திட்டம்

 
chennai airport

சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.


பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலனை செய்துவருகிறது. பொழிச்சலூர் - தாரப்பாக்கம் வழியாக அணுகுசாலை அமைக்க CUMTA பரிந்துரை செய்துள்ளது. விமான நிலையத்தை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையுடன் இணைக்க திட்டமிட்டுவருகிறது. குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் அணுகு சாலை திட்டமிடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேம்பால சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலைய பயணிகள் கையாளும் திறன் 55 மில்லியனாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.