சென்னையில் தறிகெட்டு ஓடிய கார்...ஒருவர் பலி - 3 பேர் காயம்!

சென்னை தேனாம்பேட்டையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நந்தனத்தைச் சேர்ந்த பாபு என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த பாபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அபிஸ் அகமது கைது செய்யப்பட்டார். அபிஸ் அகமது மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.