சென்னையில் அதிர்ச்சி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

 
suicide

சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருமங்கலத்தில் ஒரு தம்பதி குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் 4 பேரும் திடீரென தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நான்கு பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமா, குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.