சென்னை: பட்டாசு வெடித்த போது 38 பேர் காயம்

 
tn

சென்னையில் பட்டாசு வெடித்த போது  ஏற்பட்ட விபத்தில் 38 பேர் காயமடைந்துள்ளனர் .

tn

தமிழ்நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டியது.  இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.பசுமை பட்டாசு மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் , தீபாவளி அன்று காற்றின் தரத்தை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் நீதிமன்றம்  தெரிவித்தது. சென்னையில் பட்டாசு  வெடித்ததன் காரணமாக காற்றின் தர குறியீடு 200 தாண்டியது.  சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

வெடி

இந்நிலையில் சென்னையில் நேற்று பட்டாசு வெடித்தபோது தீக்காயமடைந்து 38 பேருக்கு சிகிச்சைபெற்றுள்ளனர் .  இதில் 9 பேர் மட்டும் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மட்டும் 16 பேர் தீக்காயத்திற்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.