சென்னையில் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ கோகைன் சிக்கியது - 8 பேர் கைது!

 
cocain

சென்னையில் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலிசார் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, 8 பேரை கைது செய்தனர். 

சென்னை, 14.04.2025 செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், அமலாக்கம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் நுண்ணறிவுப் பிரிவைச் சார்ந்த போலிசார் நம்பகமான தகவலின் அடிப்படையில் 5 நபர்களை கைது செய்து 1 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்துள்ளனர். 
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள். இந்த நடவடிக்கையின் போது, அதிகாரிகள் மேலும் ஒரு கார் மற்றும் 5 செல்போன்களை குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணை மற்றும் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கீழக்கரையைச் சேர்ந்த மேலும் மூன்று குற்றவாளிகள் என்ஐபி சிஐடி, சென்னை போலீஸ் குழுவினரால் கோயம்பேடு பகுதியில் கைது செய்யப்பட்டு, மேலும் 1 கிலோ கோகைன், ஒரு கார் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

சாயல்குடி ரேஞ்சில் வனக்காப்பாளராகப் பணிபுரியும் A1மகேந்திரன், அவரது உறவினர் A7 பாண்டியிடமிருந்து அவர் கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்குகளை சேகரிக்கும் போது கண்டுபிடித்ததாக தெரிவித்த சுமார் 1 கிலோ எடையுள்ள கோகைனை பெற்றதாக தெரிவித்தார். மேலும் A8 பழனீஸ்வரன், கடற்கரையோரத்தில் 1 கிலோ கோகைன் கிடைத்ததாக தெரிவித்தார்.