"செங்கல்பட்டு ரூட்டில் போகாதீங்க..'' பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

 
ச்

செங்கல்பட்டு GST சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் மாற்று வழியை பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதத்தைத் தவிர்க்க ECR, GWT வழித்தடங்களை பயன்படுத்தலாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சுதந்திர தினம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்வோர் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட மாற்று வழிகளையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.