ஏரியில் கவிழ்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி!
Jan 30, 2025, 10:31 IST1738213299367

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. செய்யாறு அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஏரியில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியில் மிதந்து வந்த கேஸ் சிலிண்டர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.