சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
ச்

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர்களுக்கு ஜாமீன் வழங்க செங்கல்பட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

What happened at Seeman's house? - The sensational explanation released by  the police | சீமான் வீட்டில் நடந்தது என்ன..? - போலீசார் வெளியிட்ட பரபரப்பு  விளக்கம்


சென்ன நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி வளசரவாக்கம் காவல் துறையினரால் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாகவும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ராணுவ வீரரும் சீமான் வீட்டின் பாதுகாவலருமான அமல்ராஜ் மற்றும் காவலாளி சுபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அமல்ராஜிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது

இந்நிலையில் அமல்ராஜ் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இருவருக்கும் மார்ச் மாதம் 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

சீமான் வீட்டில் அதிரடி காட்டிய போலீசார்...யார் இந்த பிரவீன் ராஜேஷ்?

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவருக்கும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தும், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.