மக்கள் அதிர்ச்சி! ஆவின் பால் பாக்கெட்டில் ரசாயன நெடி
ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வந்ததால் 160 ரோல்களை மதுரை ஆவின் மண்டலம் திருப்பி அனுப்பியது.

மதுரை மாவட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட ஆவின் நில நிற பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் நெடி வீசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பால் பண்ணை மற்றும் ஆவின் டெப்போக்களில் உள்ள பால் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய மதுரை ஆவின் நிர்வாகம், பிளாஸ்டிக் பேப்பர் ரோலில் ஏற்பட்ட குறைபாடுகளால் நெடி வீசியதாகவும், பாலில் எந்த ரசாயனமும் கலக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தது.
இதனையடுத்து ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வந்ததால் 160 ரோல்களை மதுரை ஆவின் மண்டலம் திருப்பி அனுப்பியது. பால் பாக்கெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலித்தீன் ஃபிலிம் ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது. மேலும் திருமூர்த்தி பாலிகெம் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்கவும் கோரிக்கை விடுட்துள்ளது. பெங்களூரில் செயல்படும் இந்நிறுவனம் பாலிமர் ஃபிலிம்களை தயாரித்து தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்துவருகிறது.

