தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் : முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்

 
stalin

தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் திராவிட மாடல் அரசின் வெற்றிகரமான திட்டங்களை பதிவிட்டுள்ளார்.

 மேலும் முதல்வர் மு க ஸ்டாலின், மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் #NeengalNalama திட்டம் என்றும்  பதிவிட்டுள்ளார்.