பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’- 6 மாணவிகள் சஸ்பெண்ட்

 
ச் ச்

நெல்லை பாளையங்கோட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ வைரலான நிலையில் சம்பந்தபட்ட 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குள்ள 9ம் வகுப்பை சேர்ந்த மாணவிகள் தங்களுக்கு தெரிந்த ஆண் நண்பர்கள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு  வகுப்பறைக்குள் மது பாட்டில்களை கொண்டு வந்து ஒன்றாக அமர்ந்து சியர்ஸ் சொல்லி மது குடித்துள்ளனர். இதை அருகில் இருக்கும் மாணவி ஒருவர் தனது தொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வெளியான நிலையில் நெல்லை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். 



விசாரணை செய்த நிலையில் மது குடிக்கும் செயலில் ஈடுபட்ட மாணவிகளை கண்டறிந்த பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து பெற்றோர்களை வரவழைத்து இருவரையும் ஒன்றாக வைத்து  கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் சார்பில் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவிகள் மது குடிக்கும் இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட 6 மாணவிகளும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.