முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

 
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.  

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதரத்துறை அமைச்சராக இருந்தபோது  திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவக் கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் குறித்து  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.  இது தொடர்பாக கடந்த செப்டம்பரில் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்,  இந்நிலையில் இன்று புதுக்கோட்டை  குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர். ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று தருமபுரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. காலை 10 மணியளவில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள  நிலையில் மற்றுமொரு அதிமுக அமைச்சர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.