வருகிற 25 முதல் செப்.7 வரை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

 
train

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக வருகிற 25 முதல் செப்.7 வரை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தின் இரும்புத் தூண்களை பொருத்தும் பணி நடைபெற இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 25 முதல் செப்.7 வரை வார நாட்களில் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இயக்கப்படும் 4 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரை- தாம்பரம் இடையே இரவு 10.20, 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு இயக்கப்படும் 4 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமைகளில் 7 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.