கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வருகிற 20.10.2025 அன்று திங்கட்கிழமையன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக இரண்டு நாட்கள் முன்னதாகவே பெரும்பால மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப்படாமல் கூட்ட நெரிசலில் சிக்காமல் சுதந்திரமாக பேருந்தில் ஏறி பயணிக்கும் விதமாக முக்கிய சில ஊர்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் புறப்படும் இடத்தை மாற்றியமைத்து உள்ளனர். குறிப்பாக
மேல்மருவத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் கள்ளக்குறிச்சி சேலம் செல்லும் பேருந்துகளை மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் தற்காலிகமாக 20ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


