#BREAKING ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம்!
ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, ரயில் டிக்கெட்டுகளை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும். 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏப்.1 முதல் அமலாகின்றன.

