பயணிகள் கவனத்திற்கு... குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

 
ச்

மதுரை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக 2 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 11, 13, 15, 20, 22, 25, 27, 29 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16128) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்காது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அக்டோபர் 12, 14, 16, 21, 23, 26, 28, 30 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16321) விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாலையம் ஆகிய நிலையங்களில் ரயில் நிற்காது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய நிலையங்களில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.