பராமரிப்பு பணி- சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
Updated: Feb 21, 2025, 20:29 IST1740149971007

பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் சில வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை இரவு 10 மணி முதல் பிப்ரவரி 23ம் தேதி காலை 6 மணி வரை விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் விம்கோ நகர் பனிமனையில் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.