சென்னை - கோவை ரயில் சேவையில் மாற்றம்

 
train

சென்னை - கோவை இடையேயான இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

train

இதுதொடர்பாக  தெற்கு ரயில்வே நிர்வாகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் , சாய் நகர் ஸ்ரீரடி அதி விரைவு ரயில் இன்று முதல் அக்.4ம் தேதி வரையிலும் பெங்களூரில் இருந்து புறப்படும் லால்பாக் விரைவு ரயில் காலை 6:20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் எனவும், கோவையிலிருந்து புறப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் காலை 6:20 மணிக்கு காட்பாடியுடன் நிறுத்தப்படும் .

train

சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் செல்லும் அதிவிரைவு ரயில் பிற்பகல் 1:35 மணிக்கு புறப்படும் எனவும், கோவைக்கு பிற்பகல் 2; 35 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்ட்ரலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியில் இருந்த புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, காலை 10:10 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வரும் விரைவு ரயில் அரக்கோணத்துடன் நிறுத்தம் செய்யப்படும். மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து சாய் நகர் ஸ்ரீரடி செல்லும் அதி விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 12;20 மணிக்கு புறப்படும்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.