விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு

 
dd

ஆந்திராவில் உள்ள  175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்   சுமார் 160 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது தெலுங்கு தேசம் கட்சி,  பாஜக , ஜனசேனா கூட்டணி.   தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும்,  ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.  இதன் மூலம் மீண்டும் முதல்வர்  அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு. ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார்.

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்!

ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், “ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.உங்கள் தொலைநோக்கு தலைமையின்கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். 



இந்நிலையில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.