சந்திரபாபு நாயுடு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது - வைகோ கண்டனம்

 
vaiko

சந்திரபாபு நாயுடு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்யப்பட்டுள்ளதாக  வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

vaiko ttn

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் "ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கியதற்காக, தாம் விரைவில் கைது செய்யப்படக்கூடும்” என்று செப்டம்பர் 9- ஆம் தேதி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.ஆந்திராவில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ஊழல் நடந்ததாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

கைது செய்யப்பட்ட அவர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.ஒருவேளை குற்றம் நடந்திருந்தால்கூட, விசாரணை நடத்தி, சட்டப்படி அறிவிப்பாணை வழங்கி, முறைப்படி கைது செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை ஒரு தீவிரவாதி போல கைது செய்தது கண்டனத்துக்குரியது. அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளருமான லோகேஷ், ராஜமகேந்திரவரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை. ஊழல் நடந்ததாக கூறும் பணம் எங்கு போனது, யாருக்கு யார் வழங்கியது என்பதை எங்கும் சிஐடி கூறவில்லை. குஜராத் உட்பட 7 மாநிலங்களில் திறன் மேம்பாட்டு கழகம்