ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

 
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-ஆம் வாரத்தில் தொடங்கும்- வானிலை ஆய்வு மையம்

அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், “லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா- கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் அக்டோபர் 12 அன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. ஆகவே அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்.

rain

நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் 14 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களிலும், நாளை 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். சென்னையில் ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.