4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 

4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடருவதால் அணைகள் நிரம்பி உள்ளன. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், மதுரை, பெரம்பலூர, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 11 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாளை 8 மாவட்டங்களில் கனமழையும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.