தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image


நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் சென்னையில் அதிகாலையில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.