அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
rain

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக. 11.09.2023 மற்றும் 12.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13.09 2023 மகல் 17.09.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிசு இடங்களில் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

imd

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.