அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது!

 
rain

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும்  நவம்பர் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

rain

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, திருநெல்வேலி,  ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.