அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Feb 1, 2024, 07:50 IST1706754015936
அடுத்த 3 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.