மாலை 4 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain

தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

tn

தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை செங்கல்பட்டு, சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் , கடலூர் ,பெரம்பலூர் , திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் , ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ,அரியலூர் ,திண்டுக்கல், மதுரை ,விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.