"18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை" கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!!

 
rain

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

rain

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை  விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 18 முதல் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  

Rain

இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.