கேரளா, கர்நாடகா, கோவாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- ரெட் அலர்ட் அறிவிப்பு

கனமழை காரணமாக கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், கேரளா, கடலோர கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகாவில் இன்று அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திராவில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலத்திலும்இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.