தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

 
rain

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

rain

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 3 மணிநேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.