நவ. 4ம் தேதி மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா
Oct 30, 2026, 19:45 IST1793369755968
மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்கள் கட்சி தொடங்குவதற்கு முன் 234 தொகுதிகளுக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பது வழக்கமாகவே வைத்திருந்தார். மாணவர்கள், நடிகர் விஜய்யிடம் பரிசு வாங்குவதை பெரும் அதிர்ஷ்டமாகவே பார்த்தார்கள்.
மாணவர்கள் பெற்றோர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த இந்த ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அனுமதி சீட்டுகளை, பனையூர் அலுவலகத்தில் 5 மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கினார் அமைச்சர் என்.ஆனந்த்

